/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார் அறையில் புகை பதறி ஓடிய போலீசார்; கஞ்சா போதையில் கிடந்த 8 பேர் உட்பட 9 பேர் கைது

ADDED : நவ 24, 2024 04:56 AM

காரைக்கால்: காரைக்காலில் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி புகையை கண்டு தீ விபத்து என பதறிய ஓடிய போலீசார், அறையில் 2 நாட்களாக கஞ்சா அடித்து மயங்கி கிடந்த 8 வாலிபர்கள், ஓட்டல் மேலாளர் உட்பட 9 பேரை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் ரெஸ்டோ பார்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காரைக்கால் நாகப்பட்டினம் சாலையில், நிரவி அருகே உள்ள தனியார் ரெஸ்டோ பார் ஓட்டல் அறையில் இருந்து திடீரென புகை அதிக அளவில் வெளியேறியது. தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையிலான நிரவி போலீசார் ஓட்டலுக்கு விரைந்தனர். ஓட்டல் அறை கதவை திறந்தபோது, கடும் புகை வெளியேறியது.
அறையின் உள்ளே புகை மத்தியில் 9 பேர் கஞ்சா மயக்கத்தில் கிடந்தனர். போலீஸ் விசாரணையில், திருப்பட்டினம் சாகுல்அகமது, 23; தருமபுரம் கிருத்திக் ரோஷன், 19; கிருஷ்ணகுமார், 20; கருக்களாச்சேரி ஆதில், 27; புதுத்துறை ரபீக், 19; ஹாரூன் இஸ்மாயில், 19; பாரதியார் சாலை - அந்தோணி புரூட்ஸ் ராஜா, 24; செருமாவிலங்கை ஷகில், 19; ஆகிய எட்டு வாலிபர்கள் என தெரியவந்தது.
கஞ்சா புகைப்பதற்கு ரெஸ்டோ பார் ஓட்டல் அறையை 2 நாள் வாடகைக்கு விட்ட ஓட்டல் மேலாளர் முபராக் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 260 கிராம் கஞ்சா, 7 மொபைல் போன்கள், 7,500 பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று காரைக்கால் சிறையில் அடைத்தனர்.