/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் குறைதீர் கூட்டம் கூட்டத்தை சேர்க்க தவிப்பு
/
போலீஸ் குறைதீர் கூட்டம் கூட்டத்தை சேர்க்க தவிப்பு
ADDED : பிப் 09, 2025 06:13 AM
போலீசார் புலம்பல்
புதுச்சேரி போலீசில், சனிக்கிழமை தோறும், போலீசார் பொதுமக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என்ற உத்தரவு வெளியானது. அதன்படி, சனிக்கிழமை அனைத்து போலீஸ் நிலையத்திலும், காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அந்தந்தபகுதி எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பின்பு, ஒரு சரகத்திற்கு ஒரு இடத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் என அறிவித்தனர். அதன்படி எஸ்.பி.,க்கள் தலைமையில், 6 இடங்களில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இந்த குறைதீர் கூட்டத்திற்கு, ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதியிலிருந்தும், பொதுக்களை திரளாக அழைத்து வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு வெளியானதால், குறைதீர் கூட்டத்திற்கு ஆட்களை பிடிப்பது போலீசாருக்கு பெரிய வேலையாக மாறியது.
குறிப்பாக, லாஸ்பேட்டை பகுதி மக்கள், குறைகளை கூற சேதராப்பட்டு சரக போலீஸ் நிலைய கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என அறிவித்தனர்.
அவர்களுக்கு, மிக அருகில் உள்ள டி.ஜி.பி., அலுவகலத்திலே குறைகளை கூறும் வசதி இருக்கும்போது, ஏன் 15 கி.மீ., செல்ல வேண்டும் என, அப்பகுதி மக்கள் வர மறுக்கின்றனர்.
இதனால், போலீசார் கிராம முக்கிஸ்தர்களை தொடர்பு கொண்டு கெஞ்சும் நிலை ஏற்படுகிறது. இப்படி வாரம் தோறும் ஆட்களை பிடிப்பது வேதனையாக உள்ளதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.

