தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலையாளியை தேடி போலீசார் திருப்பதி விரைவு

கொலையாளியை தேடி போலீசார் திருப்பதி விரைவு

கொலையாளியை தேடி போலீசார் திருப்பதி விரைவு


ADDED : செப் 29, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நர்ஸ் படுகொலை வழக்கில், கொலையாளியை தேடி போலீசார் திருப்பதி விரைந்துள்ளனர்.

வில்லியனுார் அடுத்த கோபாலன்கடை மெயின்ரோட்டை சேர்ந்த தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ , 22; தனியார் மருத்துவமனை நர்ஸ். இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரவுடி கலைக்குமார் என்பவரும், காதலித்து வந்தனர்.

வில்லியனுார், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய கலைக்குமார் மீது குண்டாஸ் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனால் கலைக்குமாருடன் பேசுவதை ஜெயஸ்ரீ நிறுத்திவிட்டார். சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமினில் வந்த கலைக்குமார், ஜெயஸ்ரீயிடம் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்தார். அவர், மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கலைக்குமார், தனது நண்பர் உதவியுடன் ஜெயஸ்ரீயை கடந்த 26ம் தேதி வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வரவழைத்தார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஜெயஸ்ரீயை வெட்டி படுகொலை செய்துவிட்டு கலைக்குமார் தப்பிச்சென்றார்.

புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, கலைக்குமாரை தேடி வருகின்றனர். மூன்று தனிப்படை அமைத்து புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதியில் தேடினர்.

இதனிடையே கலைக்குமார் மொபைல் போன் வைத்திருக்கும் பழக்கம் இல்லை. கூட்டாளிகளின் மொபல் போனில் பேசி பணம் தேவைப்பட்டால் நண்பர்களுக்கு ஜிபே அனுப்ப சொல்லி பணம் பெறுவது வழக்கம்.

இதனால் கலைக்குமார் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஜெயஸ்ரீ அணிந்திருந்த செயினை கலைக்குமார் எடுத்து சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நகையை விற்று அவர், வெளி ஊருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் கலைக்குமாரை தேடி திருப்பதிக்கு விரைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us