ADDED : அக் 22, 2026 07:29 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காலாப்பட்டில் அனுமதியின்றி பேனர் வந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று (அக்.,22) காலாப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சின்ன காலாப்பட்டு, இ.சி.ஆர். பல்கலைக்கழகம் 2வது நுழைவு வாயில் அருகே போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்ததாக பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த விஜயகுமார்,37; மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
