தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன் வியாபாரம் செய்வதில் பிரச்னை இரு தரப்புடன் போலீசார் பேச்சு வார்த்தை 

மீன் வியாபாரம் செய்வதில் பிரச்னை இரு தரப்புடன் போலீசார் பேச்சு வார்த்தை 

மீன் வியாபாரம் செய்வதில் பிரச்னை இரு தரப்புடன் போலீசார் பேச்சு வார்த்தை 


ADDED : ஆக 19, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மீன் வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுச்சேரி, பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள இ.சி.ஆர்., நவீன மீன் அங்காடிகளில் வைத்திக்குப்பம், குருசுகுப்பம், வம்பாகீரப்பாளையம் பகுதிகளை சேர்ந்த மீனவ பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கான மீன்களை மொத்த வியாபாரிகள் வழங்கி வருகின்றனர்.

மொத்த மீன் வியாபாரம் செய்வதற்காக மேற்கண்ட 3 மீனவ கிராம பஞ்சாயத்தாரும் தங்களது பகுதிகளில் இருந்து சிலரை 3 வருடத்துக்கு ஒருமுறை தேர்வு செய்கின்றனர். ஆனால் வைத்திக்குப்பத்தில் ஏற்கனவே ஏலம் எடுத்த நபர்கள் 3 வருடம் முடிவடைந்த பிறகும், கடந்த 2 வருடமாக மொத்த மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். அதேநேரம், வைத்திக்குப்பம் மீனவ பஞ்சாயத்தார் தேர்வு செய்த புதிய நபர்களும் மொத்த மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வைத்திக்குப்பம் மீனவ பஞ்சாயத்தார் மற்றும் புதுச்சேரி தொழிலாளர் காங்., மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் சிங்காரவேலர் மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை முத்தியால்பேட்டை காவல் நிலையம் வந்தனர்.

அங்கு இன்ஸ்பெக்டர் தனசெல்வத்தை சந்தித்து, வைத்திக்குப்பத்தை சேர்ந்த பழைய மொத்த மீன் வியாபாரிகள் மீது புகார் அளித்தனர். பொய்யான தகவலை பரப்புவதாகவும், ஊரை விட்டு யாரையும் மீனவ பஞ்சாயத்தார் ஒதுக்கவில்லை என்றும், அவதுாறான தகவலை பரப்புவதால் ஊரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.

இதையடுத்து இரு தரப்பையும் தனித்தனியாக அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்னை செய்யாமல் அமைதியாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us