ADDED : ஜூலை 02, 2026 02:13 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரசு மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ஆலத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் 35; கட்டட தொழிலாளி. இவரது மூத்த மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
கடந்த 28ம் தேதி பிரதீப் தனது மனைவியுடன் அரசு மருத்துவமனைக்கு ஸ்பிளண்டர் பைக்கில் (டி.என்.16.எப்.0111) வந்தார். பைக்கை மருத்துவமனையின் முன் நிறுத்திவிட்டு மகளை பார்க்க சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை.
புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
