தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானம்
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானம்
ADDED : ஜூலை 02, 2026 02:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் தைரிய நாதன் வரவேற்றார்.
அவைத் தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுச்சேரி மாநில நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, அக்குழு தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதியின் தற்போதைய நிலவரம் குறித்தும், தி.மு.க., வெற்றி வாய்ப்பு குறித்தும், வேட்பாளர் தேர்வு தொடர்பாக விளக்கம் அளிப்பது. தி.மு.க., தலைவர் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., கார்த்திகே யன், செந்தில், விக்னேஷ் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், தங்கவேலு, வேலன், தர்மராஜ் இளம்பரிதி, செந்தில்குமார், அமுதாகுமார், நிர்கீஸ் உட்ப ட பலர் பங்கேற்றனர்.
