/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை
/
இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை
ADDED : மே 02, 2025 04:58 AM
பாகூர்: இளம் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வார்க்கால் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் கனிமொழி 23; நர்சிங் படித்து விட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், கனிமொழி, அவரது அம்மாவிற்கு போன் செய்து, தான் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர், அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரது குடும்பத்தினர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் இல்லை.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

