/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் பெயிண்டர் பலி போலீசார் விசாரணை
/
விபத்தில் பெயிண்டர் பலி போலீசார் விசாரணை
ADDED : ஜன 01, 2025 05:45 AM
பாகூர் :  பைக்கில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், துலுக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 38;பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் காலை வீராணம் ஏரிக்கரை வழியாக கரையாம்புத்துாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை நாய் கடித்தது. கரையாம்புத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு, துலுக்கனத்தம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நிலை தடுமாறி பாஸ்கர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். பொது மக்கள் அவரை மீட்டு,புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பாஸ்கர் மனைவி சரஸ்வதி, 38, அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

