தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

 வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

 வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 13, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பூச்சு மருந்து குடித்து வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழக பகுதியான புதுக்கோட்டை அடுத்த மஞ்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் மகன் கோகுல்நாத், 26; சிங்கப்பூரில் வேலை செய்து வந்த இவர், சொந்த ஊருக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் வந்தார்.

கடந்த மாதம் வீட்டில் இருந்து கிளம்பி தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் இவரது நண்பர் தங்கியுள்ள அறையில் வந்து தங்கியிருந்தார். கடன் பிரச்னை இருப்பதாக நண்பரிடம் கூறியிருந்த நிலையல், கடந்த 20ம் தேதி, பூச்சு மருந்து குடித்தார்.

அவரது நண்பர் மூலம், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us