/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டைலர் கடையில் திருட்டு போலீசார் விசாரணை
/
டைலர் கடையில் திருட்டு போலீசார் விசாரணை
ADDED : ஆக 16, 2025 03:12 AM
புதுச்சேரி: டைலர் கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் நிர்மல்குமார், 49. இவர், முத்தியால்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கடையில், வாடகைக்கு டைலர் கடை நடத்தி வந்தார். கடந்த சில தினங்கள் முன்பு நிர்மல்குமாரிடம், கார்த்திகேயன் வாடகையை உயர்த்தி தருமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில், நிர்மல்குமார் நேற்று காலை சென்று பார்த்தபோது, கடையின் கதவை உடைத்து , 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் திருடுபோயிருந்தது.
இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசில் நிர்மல்குமார் அளித்த புகாரில், கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் சிலர் பொருட்கள், பணத்தை திருடிச்சென்றதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.