தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 2 பைக்குள் திருட்டு போலீஸ் விசாரணை

2 பைக்குள் திருட்டு போலீஸ் விசாரணை

2 பைக்குள் திருட்டு போலீஸ் விசாரணை


ADDED : செப் 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரியின் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரசூர் புருேஷாத்தமன் மகன் சிவக்குமார், 56. இவர், கடலுாரில் உள்ள பொதுத்துறை இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் இந்திரா சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே தனது பைக்கை நிறுத்தி செல்வது வழக்கம். கடந்த 21ம் தேதி, காலை வழக்கம்போல் தனது பைக்கை (பிஒய்.01.சிஎப்.9770) நிறுத்தி சென்றார். வேலை முடித்து திரும்ப மாலை 6:30 மணியவில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அவரது புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு பைக்:: லாஸ்பேட்டையை  சேர்ந்தவர் செல்வம்,62; ஓய்வு பெற்ற பி.ஆர்.டி.சி., பணியாளர். இவர் கடந்த ஜூன் 10ம் தேதி, புதுச்சேரி ஐயனார் கோவில் தெருவில் உள்ள பி.ஆர்.டி.சி., பணிமனையின் முன் தனது ஹீரோ ஸ்பிளன்டர் பிளஸ் பைக்கை (பிஒய்.05.யு.4413) நிறுத்து சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us