/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீக்காயமடைந்த டைலர் பலி போலீசார் விசாரணை
/
தீக்காயமடைந்த டைலர் பலி போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 13, 2025 12:26 AM
பாகூர் : பாகூர், தெற்கு வீதியை சேர்ந்தவர் வாசு 51; டைலர். இவரது மனைவி சுதா 38; தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வாசு மது பழக்கத்திற்கு ஆளானதால், சரிவர வேலைக்கு செல்லவில்லை. அவரது இரண்டு கால்களும் வீக்கமானதால் சிகிக்சை பெற்று வந்தார். கடந்த 7ம் தேதி காலை சுதா வேலைக்கு புறப்பட்டார்.
அப்போது, வாசு தனக்கு கால்கள் வலிப்பதாக கூறினார். சுதா அவரை மருத்துவமனைக்கு அழைத்தும் அவர், செல்லவில்லை. பின், சுதா வேலைக்கு புறப்பட்ட நிலையில், பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றனர்.
வீட்டில் வாசு தனியாக இருந்தார். அன்று மாலை அவரது பிள்ளைகள் வந்து பார்த்தபோது, வாசு தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.