தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

 தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

 தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 12, 2026 08:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 08:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த கீழ் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 42; கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் காலை திடீரென தனியாக பேசிக் கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், அவர், வீட்டில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us