ADDED : ஜூன் 12, 2026 08:49 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: தனியாக வீட்டில் இருந்த முதியவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை பகுதியை சேர்ந்த சக்திவேல், 56. இவரது மனைவி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விபத்தில் இறந்தார். சக்திவேல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் குடியிருந்தவர்கள் வீராம்பட்டினத்தில் இருக்கும் சக்திவேலின் மகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் அவரது மகள் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்க்கும் போது, சக்திவேல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
