ADDED : செப் 06, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 52; கூலி தொழிலாளி. இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய சிவக்குமார், கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் அதிக குடிபோதையில் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை அவரது மனைவி பிரபாவதி நேற்று முன்தினம் கண்டித்தார். இதனால், மனமுடைந்த சிவக்குமார், வீட்டின் மாடியில் உள்ள அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
