/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளி சாவு போலீசார் விசாரணை
/
தொழிலாளி சாவு போலீசார் விசாரணை
ADDED : ஜன 19, 2026 04:58 AM
பாகூர்: மரம் ஏறும் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாடார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 58; மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு, கற்பகம் என்ற மனைவியும், இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வம் சீசன் நேரங்களில் கரையாம்புத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, கள்ளு மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.
கடந்த 16ம் தேதி கரையாம்புத்துாரில் உள்ள தனது உறவினர் சண்முகம் வீட்டிற்கு வந்தார். பொங்கல் பண்டிகை என்பதால், மரம் ஏறும் வேலைக்கு செல்லாமல், அதிகமாக மது குடித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

