/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பேருந்து தொழிலாளர் சங்க கூட்டம்
/
தனியார் பேருந்து தொழிலாளர் சங்க கூட்டம்
ADDED : ஜன 19, 2026 04:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதி தனியார் பேருந்து தொழிலாளர் சங்க கூட்டம், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சங்கத்தின் தலைவர் மரி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். பொருளாளர் சற்குருநாதன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் அந்தோணி இன்றைய அரசியல் நிலை குறித்து பேசி, உறுப்பினர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
மாநில செயலாளர் மூர்த்தி, சங்க துணைத் தலைவர்கள் சரவணன், ஆரோக்கியநாதன், உறுப்பினர்கள் ராஜேந்திரன்,ஆனந்த், அருண், விக்கி,பிரசாத், விஷ்ணு, சசிகுமார் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அனைத்து நாட்களிலும் அனுமதி பெற்றுள்ள சாலைகளில் நகர பஸ்களை இயக்கிட எவ்வித தடையும் ஏற்படுத்தாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். தேவையற்ற நிலையில் அச்சுறுத்தும் வகையில் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். அனுமதி பெறாத வழிதடங்களில் இயங்குகின்ற வாகனங்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

