UPDATED : அக் 12, 2026 05:32 PM
ADDED : அக் 12, 2026 05:26 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கன்னியக்கோவில் சாராயக்கடை அருகே முதியவர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம் சிங்காரதோப்பு சபாபதி தெருவை சேர்ந்த விஜயகுமார், 47; இவரது தந்தை ராமச்சந்திரன், 81; இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர், கடந்த 10ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், 11ம் தேதி கன்னியக்கோவில் சாராயக்கடை பின்புறம், ராமச்சந்திரன் இறந்து கிடந்தார்.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசர், ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
