/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து போலீசார் விசாரணை
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து போலீசார் விசாரணை
ADDED : செப் 25, 2024 11:31 PM
புதுச்சேரி: முத்திரையர்பாளையத்தில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி தப்பி சென்ற, மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 24. கூலி தொழிலாளி. இவர் தனது தங்கை விஜயலட்சுமிக்கும், ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த விஷ்ணு பிரகாஷூக்கும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது.
விஜயலட்சுமி, சில மாதங்களுக்கு முன், பிரசவத்திற்காக முத்திரை பாளையத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்தார். பிரசவம் முடிந்து, விஜயலட்சுமி அவருடைய மாமியார் வீட்டிற்கு செல்லாமல் இருந்தார்.
நேற்று முன்தினம், தினேஷ்குமாருக்கும், அவரது தங்கை விஜயலட்சுமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து, வீட்டிற்கு வந்த விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் பிரபு, மூர்த்தி ஆகியோர் தினேஷ்குமாரை சரசமாரியாக தாக்கினர்.
இதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தினேைஷ வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்த பொதுமக்கள் வருவதற்குள், மூவரும் தப்பி விட்டனர். தினேஷ்குமார் மீட்கப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

