ADDED : ஏப் 12, 2026 08:00 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பஸ் நிலையம் அருகில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பஸ் நிலையம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 8ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
