ADDED : ஜூலை 09, 2026 02:49 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: ஜூலை 9-: மடுகரையில் வீட்டு எதிரில் நிறுத்திய பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மடுகரை வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் பஷீர், 52; இவர் நெட்டப் பாக்கத்தில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த மாதம் 25ம் தேதி பி.ஒய்.01.வி.ஏ.7167 பதிவு எண் கொண்ட பைக் சர்வீஸ் செய்ய வந்தது. நேரம் கடந்து விட்டதால் பைக்கை அவரது வீட்டிற்கு எடுத்து சென்று அன்று இரவு 9 மணியளவில் நிறுத்தினார். 26ம் தேதி காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பைக்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
