தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை

 கஞ்சா விற்ற வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை

 கஞ்சா விற்ற வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : ஜூலை 09, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

வில்லியனுார் பத்துக்கண்ணு சந்திப்பில் கஞ்சா விற்ற, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் குமார், 43; உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாச்சா ராஜி (எ) முகமது, 47; பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ் ஜெகதீஷ், 45; ஆகியோரை, 19.04.2023 அன்று வில்லியனுார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3 வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி கோதண்டராஜ் முன்னிலையில் நடந்து வந்தது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த்குமார், ராஜி (எ) முகமது, சந்தோஷ் ஜெகதீஷ் , ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் ஆஜரானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us