ADDED : ஆக 04, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை வி.எஸ்.நகரைச் சேர்நத்வர் நாராயணன், 50; கொத்தனார். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் நாராயணன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7:௦௦ மணியளவில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
தகவலறிந்த மடுகரை போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது, நாராயணன் அழுகிய நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.