/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடை ஊழியர் இறப்பு போலீசார் விசாரணை
/
ரேஷன் கடை ஊழியர் இறப்பு போலீசார் விசாரணை
ADDED : அக் 24, 2024 06:26 AM
பாகூர்: ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் கரையாம்புத்துார் அடுத்துள்ள பனையடிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சை 56; இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12ம் தேதி நண்பருடன், ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்று 13ம் தேதி இரவு ஊருக்கு வந்துள்ளார். அன்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக, பச்சை தலையில் அடிபட்டு விழுந்து கிடப்பதாக, அவரது குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அவரது மகன் பிரவின் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பச்சையை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு , சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் பச்சை உயிரிழந்தார்.
பிரவின் புகாரின் பேரில் பச்சைக்கு தலையில் எப்படி அடிபட்டது என்பது குறித்து சந்தேகம் உள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.