ADDED : மே 19, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுாரில் இரண்டு பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் ஒதியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன், இவரது மனைவி ஹேமவாதி 58, சம்பவத்தன்று குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்ட வெளியே சென்றவர், அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை.
உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதோபோல் சுல்தான்பேட்டை சபீக் மனைவி சுமயாபேகம், 28. இவரும் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறியவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகார்களின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.