/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவர் இறப்பு போலீஸ் விசாரணை
/
முதியவர் இறப்பு போலீஸ் விசாரணை
ADDED : ஜன 13, 2026 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள், 75, இவரது கணவர், மகன் இறந்த நிலையில், மயிலாடுதுறையை சேர்ந்த பாவாடைசாமி, 76, என்பவருடன், பூரணாங்குப்பம் கோவிலில் தங்கி, இருவரும் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், பூரணாங்குப்பம், பஸ் ஸ்டாப்பில் படுத்திருந்த பாவாடைசாமி நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

