/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கூட்டர் தீவைத்து எரிப்பு போலீசார்விசாரணை
/
ஸ்கூட்டர் தீவைத்து எரிப்பு போலீசார்விசாரணை
ADDED : பிப் 03, 2024 12:12 AM
புதுச்சேரி- தனியார் மோட்டார் பைக் நிறுவன மேலாளர் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட் பாவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் புருேஷாத்தம்மன், 48; தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தின் மேலாளர்.
இவர் தனது ஸ்கூட்டரை (பி.ஒய்.01.சி.இ. 5748) நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஸ்கூட்டரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். அதனுடன் அவரது மாமானர் ராமலிங்கத்தின் காரும் எரிந்து கொண்டிருந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

