ADDED : ஜூன் 22, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏம்பலம் அருகே கல்லுாரி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏம்பலம் அடுத்த செம்பியப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் ஆதவன், 22. இவர், தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த ஒரு வாரமாக சோகமாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டு தோட்டத்தில் உள்ள பூவரசன் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
