ADDED : ஆக 14, 2026 06:01 PM
புதுச்சேரி: திருக்கனுார் அருகே கல்லுாரி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த கொடாத்துார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் மகன் இளமாறன், 19; லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்தார்.
இளமாறன் நேற்று முன்தினம் கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். பின் மாலை அவரது தாய் மகேஸ்வரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இளமாறன் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை, மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதை உறுதி செய்தார். புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
