நீர்நிலைகள் துார்வாரும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
நீர்நிலைகள் துார்வாரும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 14, 2026 03:40 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் நீர்நிலைகள் துார்வாரும் பணியினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத 125 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ், நெட்டப்பாக்கம் தொகுதி கல்மண்டபம் - பண்ட சோழநல்லுார் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஏரி, குளங்கள் ஆகிய பகுதி கள் துார்வாரப்பட உள்ளன.
இப்பணியினை அமைச்சர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி சவுந்தரி, உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர்கள் தனராஜூ, சிவப்பிரகாசம், பணி ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் மணமேடு, கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகளில் துார் வாரும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
