/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
/
இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
ADDED : ஆக 30, 2025 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் சாலை, கன்னியக்கோவில் அரசு வங்கி அருகில், 40 வயது மதிக்கத்தக்கவர், கடந்த 23ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.