UPDATED : நவ 07, 2026 09:38 PM
ADDED : நவ 07, 2026 09:36 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் அணிவகுப்பு நடந்தது.
புதுச்சேரியில் விழாக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை போக்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., ஸ்ருதி, இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார், கார்த்திக்கேயன், தனசெல்வம், போக்குவரத்து போலீசார் திரளாக பங்கேற்று அணிவகுத்து சென்றனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை போலீசாரின் அணிவகுப்பு நடந்தது.
