நகரப்பகுதி வாய்க்கால்களில் துார் வாரும் பணி தீவிரம்
நகரப்பகுதி வாய்க்கால்களில் துார் வாரும் பணி தீவிரம்
UPDATED : நவ 07, 2026 09:38 PM
ADDED : நவ 07, 2026 09:36 PM

புதுச்சேரி: வடிகால் வாய்க்கால்களில் பொதுப்பணித்துறை மூலம் துார் வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 25ம் தேதி பெய்த கன மழையில் நகர பகுதி முழுதும் மழைநீரில் தத்தளித்தது. வடிகால் வாய்க்கால்களில் குவிந்திருந்த கழிவுகள், குப்பைகளால் மழைநீர் வெளியேற முடியால் நகர பகுதியில் மழைநீர் சூழ்ந்தது.
அதையடுத்து, புதுச்சேரியில் உள்ள பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால், தேங்காய்த்திட்டு வாய்க்கால்களை துார்வார முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
ஒயிட் டவுன் பகுதியில், அரவிந்தர் வீதியில் இருந்து திப்ராயப்பேட்டை வழியாக கடலில் கலக்கும் 2 கி.மீ., பெரிய வாய்க்கால் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதேபோல் தேங்காய்த்திட்டு கழிமுக வாய்க்கால் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
