/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்பெனி மீது வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை
/
கம்பெனி மீது வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை
கம்பெனி மீது வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை
கம்பெனி மீது வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்களுக்கு போலீஸ் வலை
ADDED : மே 24, 2025 04:17 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே தனியார் அட்டை கம்பெனி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மூன்று சிறுவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த கோனேரிக் குப்பம் கிராமத்தில் புதுச்சேரி, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த உமாபதி என்பவர், ஜெயலட்சுமி பேக்கேஜிங் என்ற கம்பெனி நடத்தி வருகிறார்.
இவரது கம்பெனி மீது நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு, தப்பிச்சென்றனர்.
இது குறித்து கம்பெனி சூப்பர்வைசர் சிங்காரவேலு கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில், வெடிகுண்டு வீசியது கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் மற்றும் அகரம் புதுநகரை சேர்ந்த ஒரு சிறுவர் என அடையாளம் தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.