sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி : 6 பேருக்கு போலீஸ் வலை

/

 ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி : 6 பேருக்கு போலீஸ் வலை

 ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி : 6 பேருக்கு போலீஸ் வலை

 ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி : 6 பேருக்கு போலீஸ் வலை


ADDED : நவ 21, 2025 05:58 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏலச்சீட்டு நடத்தி ரூ. 25 லட்சத்தை மோசடி செய்ய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதலியார்பேட்டையை சேர்ந்தவர் வைரமணி,57. இவர், 45 அடி சாலையில் உடற்பயிற்சி நிலையம் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் புதுச்சேரியை சேர்ந்த முருகன் (எ) ரஜினி, கடந்தாண்டு மாதச் சீட்டு கட்டினார். சீட்டு முடிந்ததால், அதற்கான ரூ.25 லட்சம் தருவதற்கு பதில் ரூ.5 லட்சம் மட்டும் வைரமணி கொடுத்தார். மீதி தொகையை பிறகு தருவதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து முருகன், மீண்டும் புதிய சீட்டு சேர்ந்து கடந்த 5 மாதமாக ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 850 கட்டியிருந்தார். ஆனால், பழைய சீட்டு பணம் ரூ.20 லட்சத்தை தரவில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சந்தேகமடைந்த முருகன், சீட்டு நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டியிருந்தது.

இதுகுறித்து முருகன், சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விசாரித்ததில், வைரமணி, அவரது மகன் தேவா,28; மகள் தவமணி,24; மேலும், சீட்டு நிறுவன ஊழியர்கள் லாஸ்பேட்டை சாந்தி நகர் புஷ்பா,45; வம்பாகீரப்பாளையம் மணிமேகலை,35; பாகூர் பாலா,46; ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து விட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, வைரமணி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us