/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீவிரவாத ஊடுருவலை தடுக்க கடலோரத்தில் பாதுகாப்பு ஒத்திகை
/
தீவிரவாத ஊடுருவலை தடுக்க கடலோரத்தில் பாதுகாப்பு ஒத்திகை
தீவிரவாத ஊடுருவலை தடுக்க கடலோரத்தில் பாதுகாப்பு ஒத்திகை
தீவிரவாத ஊடுருவலை தடுக்க கடலோரத்தில் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : நவ 21, 2025 05:57 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், கடலோர பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் நுழைந்து, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, கடலோரத்தில், பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, தீவிரவாத ஊடுருவலை தடுக்கவும், ஆண்டிற்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி கடலோர காவல்படையினர் கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில், போலீசார் கடலோர பகுதியில் சோத னையில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சியில், நேற்று 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த பாதுகாப்பு சோதனையில், கடல் வழியாக சென்ற விசைப்படகுகள், நாட்டுப்படகில் வந்தவர்களை கடலோர போலீசார் நிறுத்தி, சோதனை செய்தனர். மேலும், படகில் இருந்த பொருட்களை சோதனை செய்தனர். படகு ஓட்டுபவரின் அடையாள அட்டை உரிமம் ஆகியற்றை போலீசார் கேட்டறிந்தனர்.
கடல் வழியாக சந்தேகப்படும்படியாக வரும் நபர்கள் குறித்து கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி, மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.
புதுச்சேரி கடற்கரை, தேங்காய்த்திட்டு துறைமுகம், வீராம்பட்டினம், பனித்திட்டு, காலாப்பட்டு வரை கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் (21ம் தேதி) கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது.

