/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராவல்ஸ் கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்த நபருக்கு போலீஸ் வலை
/
டிராவல்ஸ் கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்த நபருக்கு போலீஸ் வலை
டிராவல்ஸ் கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்த நபருக்கு போலீஸ் வலை
டிராவல்ஸ் கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்த நபருக்கு போலீஸ் வலை
ADDED : ஏப் 27, 2025 07:12 AM
புதுச்சேரி : டிராவல்ஸ் உரிமையாளரை ஏமாற்றி, நான்கு கார்களை வாடகைக்கு எடுத்து சென்று தமிழகத்தில் அடமானம் வைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சரவணன், 46; டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் சில தினங்களுக்கு முன், மூலகுளத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், தன்னை மற்றொரு டிராவல்ஸ் உரிமையாளரான சீனு அனுப்பியதாக கூறி, கார் வாடகைக்கு வேண்டும் என, கேட்டார்.
இதை நம்பிய சரவணன், அவரிடம் ரூ. 10 ஆயிரம் முன் பணம் பெற்றுக்கொண்டு, 2 கார்களை அனுப்பி வைத்தார். தொடர்ந்து, கடந்த 15ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் தலா ஒரு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றார்.அடுத்தடுத்து நான்கு கார்களை எடுத்து சென்றதால், சந்தேகமடைந்த சரவணன், 18ம் தேதி, சிவக்குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. வீட்டிற்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், கார்களில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்., கருவியை ஆய்வு செய்தபோது, விழுப்புரம் மாவட்டம், வண்டிமேட்டில் கார்கள் இருப்பது தெரிய வந்தது.
உடன் அவர், தனது நண்பர்களுடன் அங்கு சென்று பார்த்த போது, கார்கள் குடோனில் இருந்தன.
குடோன் உரிமையாளர் உஸ்மானிடம் விசாரித்த போது, சிவக்குமார் நான்கு கார்களையும் ரூ. 3 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சரவணன் நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

