/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
/
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
ADDED : ஏப் 26, 2025 03:57 AM
புதுச்சேரி :  விவசாயி வீட்டில் 7 சவரன், 10 ஆயிரம் பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கே.குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி, 70; விவசாயி. இவரது மனைவி தனபாக்கியம். இவர் மதகடிப்பட்டில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல், தனபாக்கியம் வாழைப்பழ வியாபாரத்திற்கு சென்றார். வீட்டில் இருந்த மற்றவர்களும், வேலைக்கு சென்றனர். தனியாக இருந்த தண்டபாணியும், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தார்.  பின், தண்டபாணி பிற்பகலில் வீடு திரும்பியபோது, கிரீல் கேட் திறந்து கிடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவின் தாழ்ப்பாள் நீக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. அறைக்குள் சென்று பார்த்தபோது, இரும்பு பீரோவை திறந்து அதில்   வைத்திருந்த 7 சவரன் மற்றும் 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.
தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

