/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
/
பைக் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 21, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தனியார் விடுதியில் நிறுத்திருந்த பைக்கை திருடி சென்ற நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 33; இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதரர் கடலுார் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்கிறார். அவரை பார்க்க கடந்த 18ம் தேதி பைக்கில் சென்றார். பைக்கை விடுதி வாசல் முன்பு நிறுத்திவிட்டு, அன்று இரவு அங்கு தங்கினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, பைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய சென்ற நபரை தேடி வருகின்றனர்.