தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்விரோதத்தில் தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை

முன்விரோதத்தில் தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை

முன்விரோதத்தில் தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை


ADDED : ஆக 12, 2026 08:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 08:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முன்விரோத தகராறில் தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

பூமியான்பேட்டை, உழந்தை ஏரிபாதை, புத்தர் வீதியை சேர்ந்தவர் சசிகுமார், தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் இளமாறன், 18. இவர், நேற்று முன்தினம் ஜவகர் நகர் பூங்கா அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த பூமியான்பேட்டை, புத்தர் வீதியை சேர்ந்த நவீன், ஸ்ரீகாந்த், இனியன் மற்றும் சிலர் முன்விரோதம் காரணமாக இளமாறனை தகாத வார்த்தைகளால் திட்டினர். 

இதை இளமாறனின் மாமா திருவரசன் கண்டித்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. 

ஆத்திரமடைந்த நவீன், ஸ்ரீகாந்த், இனியன் ஆகியோர் அருகிலிருந்த உருட்டு கட்டை மற்றும் செங்கல்லால் இளமாறன் மற்றும் திருவரசனை கடுமையாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றனர். காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில், நவீன், ஸ்ரீகாந்த், இனியன் ஆகியோர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us