/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீதிக்கு வந்த போலீஸ் அதிகாரி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அதிரடி
/
வீதிக்கு வந்த போலீஸ் அதிகாரி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அதிரடி
வீதிக்கு வந்த போலீஸ் அதிகாரி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அதிரடி
வீதிக்கு வந்த போலீஸ் அதிகாரி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அதிரடி
ADDED : அக் 12, 2025 05:29 AM

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் தொடர் விடுமுறைகளால் புதுச்சேரி சாலைகள் நெரிசலில் திணறி வருகின்றன. முக்கிய சாலைகள், சந்திப்புகளில் நத்தை வேகத்தில் வாகனங்கள் நகருகின்றன.
சாதாரணமாக வார விடுமுறையில் 2.5 லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் திரள்வர். தொடர் விடுமுறையும் வார இறுதி நாட்களும் சேர்ந்து வந்தால் புதுச்சேரியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வாகனங்களுடன் திரளுகின்றன. இதனால் புதுச்சேரி நகரம் விழிபிதுங்கி வருகிறது.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் போக்குவரத்து எஸ்.பி., ரட்சனா சிங் நேரடியாக களம் இறங்கியுள்ளார். நெரிசல் மிகுந்த இடங்களை நேரடியாக பைக்கை ஓட்டி செல்கிறார். அங்கே மைக்கை பிடித்து பார்க்கிங்கை ஒழுங்கும்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்.
ஒவ்வொரு நாளும் பைக்கில் நகர் வலம். ஒவ்வொரு சிக்னலாகவும் சென்று கண்காணிக்கின்றார். அங்கு நெரிசலை ஒழுங்குப்படுத்த பணியில் இருக்கும் போலீசாருக்கு அறிவுரை வழங்கி அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார்.
இதுமட்டுமின்றி இரண்டு ஷிப்ட் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து களத்தில் இறக்கிவிட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தி வருகிறார். இன்டர்செப்டர் வாகனங்கள், அவசர சேவை வாகனங்கள், பைக் ரோந்து குழுக்கள் தொடர்ந்து பார்க்கிங்கை கண்காணிக்க இறக்கிவிடப்பட்டுள்ளன.
வழக்கமாக போக்குவரத்து எஸ்.பி.,க்கள் களத்தில் நெரிசலை ஒழுங்குப்படுத்துவது கிடையாது. உத்தரவுகளை மட்டும் பிறப்பித்தப்படி இருப்பர். அத்திபூத்தாற்போல் எப்போதாவது தான் களத்திற்கு வருவர். அப்படியே வந்தாலும் அது வி.ஐ.பி., வருகையின்போது தான் இருக்கும்.
ஆனால் போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டமாக இருக்கும் நேரத்தில், எஸ்.பி., ரட்சனா சிங் வீதிக்கு நேரடியாக வந்து, போக்குவரத்தை கண்காணித்து வருவது பொதுமக்களிடம் மட்டுமின்றி வணிகர்களிடம் பாராட்டினை பெற்றுள்ளது.