ADDED : அக் 30, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஓட்டல் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ராமு,67; குருமாம்பேட்டில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று (அக்.,29) மதியம் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோரிமேடு ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். அவர் வழிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மேட்டுபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
