/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்டிக் கடைகளில் போலீசார் சோதனை
/
பெட்டிக் கடைகளில் போலீசார் சோதனை
ADDED : அக் 22, 2024 05:41 AM
புதுச்சேரி: தடை செய்யப்பட்ட கூல் லீப், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதையடுத்து, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகர் சூர்யகுமார், பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நகர பகுதி பள்ளிகள் அருகே கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.
திட்ட ஆலோசகர் சூர்யகுமார் கூறுகையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கலாம். 18 வயது நிரம்பாதவர்களுக்கு விற்பனை செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது சிகரெட் பிடித்து கொண்டிருந்த நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அவர், 15 வயது சிறுவன் கூட கஞ்சா, சிகரெட் பிடிக்கிறான். விடிய விடிய சரக்கு கள்ளத்தனமாக விற்கின்றனர். இதை எல்லாவற்றையும் நிறுத்த சொல்லுங்கள் என கூறும் வீடியோ, வைரலாகி வருகிறது.