ADDED : நவ 14, 2026 06:03 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களில் நள்ளிரவில் போலீஸ் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி போலீசாரின் ‘ஆப்ரேஷன் கவசம்’ சோதனை யொட்டி, நேற்று (நவ.,13) நள்ளிரவில் புது பஸ் ஸ்டாண்டில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கணேஷ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதே போல, புதுச்சேரி வடக்கு பகுதியில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா தலைமையிலும், தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் நள்ளிரவில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், ரவுடி கும்பலை கட்டுப்படுத்துவது, பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது, நிபந்தனைகள்படி பார்கள், மதுக்கடைகள், சாராயக் கடைகள் உரிய நேரத்தில் மூடுவது, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை மீது நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
