ADDED : மார் 19, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் எல்லைப் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறையினர் மாநில எல்லைப் பகுதியில் சோதனை சாவடி அமைத்து, வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, நேற்றிரவு 7:00 மணியளவில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, தேர்தலை முன்னிட்டு பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டனர்.

