/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'இன்டர் செப்டார்' வாகனத்துடன் போலீஸ் 'ரெடி' விதிமீறும் வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை

ADDED : அக் 05, 2025 03:08 AM

புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
சாலைகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதும், அதிவேகம், அஜாக்கிரதை வாகன ஓட்டிகளாலும்பெரும்பாலான விபத்துக்கள் நடக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி போலீஸ் துறையை நவீன மயமாக்கும் வகையில், 5 போக்குவரத்து பிரிவுக்கும் என, தலா ஒரு இடைமறிப்பு வாகனம் (இன்டர் செப்டார்)கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன்டர்செப்டார் வாகனத்தில் பொறுத்தப்பட்டுள்ள 360 டிகிரி சுழலும் கேமரா, ஸ்பீடு ஹண்டர் கருவிகளின் மூலமாக, அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனம் சுமார் 300 மீட்டர் துாரத்தில் வரும் போதே அதன் வேகம் கணக்கிடப்பட்டு, பதிவு எண் ஸ்கேன்செய்து துள்ளியமாக பதிவு செய்யப்படும். அதனை ஆதரமாக கொண்டு, சம்மந்தப்பட்ட வாகன ஓட்டியின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்பார்கள்.
தற்போது, இந்த இன்டர்செப்டார் வாகனத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் இது முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.