/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர கடிகார கடை போலீசார் வழக்குப் பதிவு
/
சாலையோர கடிகார கடை போலீசார் வழக்குப் பதிவு
ADDED : செப் 04, 2025 01:20 AM
பாகூர் : போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரம் சுவர் கடிகாரம் வியாபாரம் செய்த, புதுக்கோட்டை நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலை, நோணாங்குப்பம் மேம்பாலம் அருகே சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூராக, ஒரு நபர் சுவர் கடிக்கார கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். அங்கு சென்ற போலீசார், சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூராக கடை வைக்க கூடாது என எச்சரித்து, கடையை அகற்றினர்.
இது குறித்து ஏட்டு அய்யனார் அளித்த சிறப்பு அறிக்கையின் படி, உதவி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், கடை உரிமையாளரான புதுக்கோட்டை கலிபுல்லா நகரை சேர்ந்த ராவுத்தர், 40; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.