/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் உதய நாள் மரக்கன்று நடும் விழா
/
போலீஸ் உதய நாள் மரக்கன்று நடும் விழா
ADDED : அக் 02, 2025 11:12 PM

திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் இரு வார சேவை விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை எஸ்.பி., சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி போலீஸ் உதய நாள் மற்றும் இருவார சேவை விழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன் தலைமை தாங்கி, மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், கீர்த்திவர்மன் முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் வரவேற்றனர்.
தொடர்ந்து, கூனிச்சம்பட்டு ஏரிக்கரை சாலை, காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் வளாகம் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், திருக்கனுார், காட்டேரிக்குப்பம், திருபுவனை, நெட்டப்பாக்கம் ஸ்டேஷன்களை சேர்ந்த போலீசார் பலர் கலந்து கொண்டனர்.