தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கருவடிக்குப்பத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கருவடிக்குப்பத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கருவடிக்குப்பத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


UPDATED : அக் 29, 2026 11:09 PM

ADDED : அக் 29, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:09 PM ADDED : அக் 29, 2026 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பத்தில் தீபாவளியை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி நகரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பண்டிகை கால அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு, கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற குரு சித்தானந்தா சுவாமி கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் லாஸ்பேட்டை போலீஸ் சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், அப்பகுதியில் தேவையின்றி சுற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த முயல்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யவும், பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்லவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us